37)
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார் – 2
1. எளியோருக்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே - 2
உரிய பெயரை வைத்ததும் நாமே - 2
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பதும் நாமே
2. நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரைக் குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும் - 2
ஆழ்கடலைத்தான் கடந்தாலும் - 2
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழிநடத்துகின்றோம்
38)
உன் திருயாழில் என் இறைவா
உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும் - 2
யாழிசைக் கேட்டுத் தனை மறந்து - 2 உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே
2. விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2
உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
39)
உன் நாமம் சொல்லச் சொல்ல
உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதையா - 2
1. மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா-2
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா
2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னென்பேன் - 2
நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
40)
உம் சிறகுகள் நிழலில்
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்
வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
கிறிஸ்துவின் அன்பினின்று
கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப்
பிரிப்பவன் யார் -2
1. வானத்தின் தலைமைத் தூதர்களோ
வல்லமை வலிமை மிருந்தவரோ - 2
வானத்தில் உள்ள வேறெதுவோ
வாக்கினில் வந்த படைப்புகளோ
2. வாட்டிடும் வயிற்றுப் பெரும் பசியோ
வாழ்வினை முடிக்கும் கொடும் வாளோ - 2
ஆட்டிடும் உலகின் இடர் பலவோ
அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ
கலைமான் நீரோடையை
கலைமான் நீரோடையை
ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது
உயிருள்ள இறைவனில்
தாகம் கொண்டலைந்தது
இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது
மக்களின் கூட்டத்தோடு
விழாவில் கலந்தேனே
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது
என்னைச் சுமப்பதனால் இறைவா
என்னைச் சுமப்பதனால் இறைவா
உன் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா உன் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை - 2
ஆயிரம் மைல்கள் நடந்திட்டபோதும் நதிகள் அழுவதில்லை - 2
1. கருவைச் சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழிச் சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை - 2
மதுவைச் சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை - 2
வானைச் சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை - 2
2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இறக்கும் மனதுக்குச்
சிலுவைகள் சுமையில்லை - 2
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நானொரு சுமையில்லை - 2
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் இதயம் சுமையில்லை - 2
என் ஆன்மா இறைவனையே
என் ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்
தயையுடன் கண்கள் நோக்கினார் - 2
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப் பேருடையாள் என்றிடுமே
என் ஆன்மா
2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் - 2
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும்
-- என் ஆன்மா
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
ஆண்டவர் தம் திருத் தலத்தில்
பாடுங்கள் ஆண்டவருக்கு
புதியதோர் பாடல் பாடுங்கள்
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா
ஆண்டவர் தம் திருத் தலத்தில் - அவரை
புகழ்ந்து பாடுங்கள்
மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரை
புகழ்ந்து பாடுங்கள்
எக்காள தொனி முழங்க - அவரை
புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து - அவரை
புகழ்ந்து பாடுங்கள்
முரசொலித்து நடனம் செய்து - அவரை
புகழ்ந்து பாடுங்கள்
நரம்பிசைத்து குழல் ஊதி - அவரை
நல்ல இதயம் ஒன்று தா
நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்கு தா - 2
அதில் அன்பை நிறைத்து தா அனைவருக்கும் நான் அளிக்க தா
1. எனக்கெதிராய் பகைமை செய்வோரை மன்னிக்கும் மனதைத்தா - 2
அந்தப் பகைமையைத் திரும்ப நினையாமல்
நான் மறக்கும் மனதைத்தா
2. உன்னால் அடைந்த நன்மை மறவாத உள்ளம் ஒன்று தா - 2
எந்நாளும் உந்தன் நினைவாய் வாழும் உள்ளத்தை எனக்கு தா
யாரிடம் செல்வோம் இறைவா
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன - யாரிடம் செல்வோம் இறைவா
1. அலைமோதும் உலகினிலே ஆறதல் நீ தரவேண்டும் - 2
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் - 2
2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2
3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ - 2
என் தலைவர் என் வாழ்வுக்கு
என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன்
என்றும் இருக்கின்றார்
1. கடவுளே உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்
உமது மேன்மைமிகு ஆற்றலினால்
எனது நேர்மையை நிலைநாட்டும் - 2
கடவுளே விண்ணப்பத்தைக் கேட்டருளும்
எனக்குச் செவிசாயும் - 2
2. இதோ கடவுள் எனக்கு என்றும் துணைவராய் இருக்கின்றார்
எனது வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார் - 2
ஆர்வத்தோடு உமக்கு பலிசெலுத்துவேன்
நன்றி செலுத்திடுவேன் - 2
என் இறைவனே என் தெய்வமே
உம்மை எந்நாளும் போற்றிடுவேன்
உம்மை எந்நாளும் பாடுவேன் - 2
1. கனிவான இறைவனே போற்றி
கருணை தெய்வமே போற்றி - 2
சினம் கொள்ளாதவர் நன்மை புரிபவர் - 2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன் - 2
2. வானம் பூமி உம்மைப் போற்றுமே
உயிர்கள் யாவும் நன்றி சொல்லுமே - 2
பல சந்ததிகள் உம்மைப் பாடுமே - 2
உம் பேரன்பை வாயாரப் பாடுவேன் - 2
என் நெஞ்சிலே என் ஜீவனை
என் நெஞ்சிலே என் ஜீவனை தினம் பாடும் ஒரு பாடல் நீயாகுவாய்
உன் நெஞ்சிலே ஓயாமலே பண்பாடும் புதுராகம் நானாகுவேன்
உயிர் தேடும் உறவாகுவாய்
உனில் வாழும் உயிராகுவாய்
என் நெஞ்சிலே என் ஜீவனை தினம் பாடும் ஒரு பாடல் நீயாகுவாய்
உன் சொல்லில் உலகெல்லாம் உருவாக்கினாய்
உன் அன்பில் உலகில் என் உயிராகினாய்
உன் பாதையில் நாள்தோறும் செல்ல நான் உன் பின் செல்ல
உன்னோடு பலியாகுவேன் உன்னாலே உருமாறுவேன்
என் நெஞ்சிலே என் ஜீவனை தினம் பாடும் ஒரு பாடல் நீயாகுவாய்
உன் வார்த்தை நான் பேசும் மொழியாகுவாய்
உன் ஆசை நான் போகும் வழியாகுவாய்
உன் சாயலில் உலகெல்லம் செல்ல உறவின் வழி வெல்ல
உன்னோடு பலியாகுவேன் உன்னாலே உருமாறுவேன்.
என் நெஞ்சிலே என் ஜீவனை தினம் பாடும் ஒரு பாடல் நீயாகுவாய்
உன் நெஞ்சிலே ஓயாமலே பண்பாடும் புதுராகம் நானாகுவேன்
உயிர் தேடும் உறவாகுவாய்
உனில் வாழும் உயிராகுவாய்
என் தேவனே உன் அடியேன் நான்
என் தேவனே உன் அடியேன் நான்
அமைதியில்லா இவ்வுலகில் உன்
அமைதியின் தூய கருவியாக
என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் - 2
எங்கே பகைமை நிறைந்துள்ளதோ
அங்கே அன்பை விதைத்திடவும்
எங்கே கயமை நிறைந்துள்ளதோ
அங்கே மன்னிப்பை அளித்திடவும்
எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ
அங்கே நம்பிக்கை ஊட்டிடவும்
இறைவா அருள்வாய் - 2
எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ
அங்கே புத்துயிர் அளித்திடவும்
எங்கே இடரும் இருள் உள்ளதோ
அங்கே ஒளியை வழங்கிடவும்
எங்கே கவலை மிகுந்துள்ளதோ
அங்கே மகிழ்ச்சி அளித்திடவும்
இறைவா அருள்வாய் - 2
என் இயேசுவே உன்னை நான்
என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்.!
எந்நாளும் உன் அருளை நான்
பாடி மகிழ்ந்திருப்பேன்
என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்!
உன் நாமம் என் வாயில்
நல் தேனாய் இனிக்கின்றது
உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்
செய்தியாய் ஜொலிக்கிறது
உன் அன்பை நாளும் எண்ணும் போது
ஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே
உன் நெஞ்சின் கனவுகளை
நிறைவேற்ற நான் உழைப்பேன்
உறவாகும் பாலங்களை
உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில்
இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே
உறவு ஒன்று உலகில் தேடி
உறவு ஒன்று உலகில் தேடி
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2
உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2
1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே
வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2
அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா
ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா
உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா
அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா
2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே
துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2
இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா
நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்...
இயேசுவின் இருதயமே
இயேசுவின் இருதயமே
என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே - 2
இறைவனுக்கு இதயமுண்டு
அந்த இதயத்தில் இறக்கமுண்டு
இறைவனுக்கு இதயமுண்டு
அந்த இதயத்தில் இறக்கமுண்டு
என்றும் இறங்கிடும் இறைவன் இருப்பதினால்
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2
இயேசுவின் இருதயமே
என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே
கடவுளின் கருணை உண்டு
அந்த கருணைக்கும் உருவம் உண்டு
கடவுளின் கருணை உண்டு
அந்த கருணைக்கும் உருவம் உண்டு
என்றும் உருவத்தில் உயிர்த்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
என்றும் உருவத்தில் உயிர்த்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
இயேசுவின் இருதயமே
என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே
இயேசுவின் இருதயமே
என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே
ஆயிரங்கள் பார்த்தாலும்
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே......
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே
உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே
ஆண்டவர் எனதாயன்
ஆண்டவர் எனதாயன் - எனக்கு
வேண்டியதொன்றும் இல்லை - 2
பசும்புல் மேச்சல் நிலத்தில் - என்னை
படுக்கச் செய்கின்றாரே - என்னை
படுக்கச் செய்கின்றாரே.
தேற்றும் நீரருகே என்னையழைத்து
புத்துயிர் ஊட்டுகின்றாரே
தம்பெயர் பொருட்டென்னை நேரியவழியில்
நடத்திச் செல்கின்றாரே - என்னை
நடத்திச் செல்கி;றாரே
காரிருட் கணவாயில் நான் நடந்தும்
தீமை எதற்கும் அஞ்சேன்
ஏனெனில் நீரென்னோடிருக்கையில் - உம்
தண்டும் கோலும் தேற்றும் - உம்
தண்டும் கோலும் தேற்றும்
எனது பகைவர் பார்த்திட எனக்கு
விருந்தொன்றமைக்கின்றீரே
என் தலைக்கெண்ணை பூசுகின்றீர் - என்
கிண்ணம் நிரம்பி வழிகின்றதே – இதோ
கிண்ணம் நிரம்பி வழிகின்றதே
ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர்மீது
ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர்மீது
அவர் இரக்கம் என்றென்றும் இருக்கும் - 2
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
என் அகத்துள்ளதெல்லாம் - அவர்
திருப்புகழை வாழ்த்துவதாக
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே
அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்
உன் உயிரை அழிவினின்று மீட்கிறார்
அருளையும் இரக்கத்தையும் - எனக்கு
முடியாகச் சூட்டுகின்றார்
இயேசு நாமம் பாடப்பாட
இயேசு நாமம் பாடப்பாட
இனிமை பொங்குதே - அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே (2)
1
ஓங்கும் குரலைக்காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே (2)
என்னுள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவ தேவா வா
2
தூங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான்தீபம் காணவே (2)
உன் அன்பில் வாழவே
உன்னோடு சேரவே என்னில் நீ வாழ வா
என் தேவ தேவா வா.
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பிப் பார்க்க மாட்டேன் -2
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய குருதியினாலே
வீடுதலை அடைந்தேனே
அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ
ஆதலில் குறையில்லை
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே;
விடுதலை அடைந்தேனே
தாயும் அவரே தந்தையும் அவரே
தரணியர் நமக்கெல்லாம்
சேர்கள் நம்மை செல்வழி நடத்தும்
தெய்வம் அவரன்றோ
ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
ஆறுதல் அடைந்தேனே
இயேசுவின் திருநாம கீதம் என்
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே
சங்காக முழங்கிட வேண்டும் - 2
1. நான் பாடும் பாடல் நானிலம் எங்கும் எதிரொலித்திட வேண்டும் - 2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெறவேண்டும் உவகை பெறவேண்டும் - 2
2. பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின்
இணையில்லா திருநாமம் - 2
வாழவைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள்தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் - 2
இயேசுவே உந்தன் வார்த்தையால்
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே - 2
நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தேவனே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
2. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே - 2
வென்றிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
இறைவன் எனது மீட்பராம்
இறைவன் எனது மீட்பராம் – அவரே
எனக்கு ஒளியானார்
அவரைக் கோண்டு நான் வாழ
எவரைக் கண்டு பயமில்லை....
வாழ்வின் இறைவன் துணையானார்
வாழும் எமக்கு உயிரானார்
நீயோர் என்னை வதைத்தாலும்
தீமை அணுக விடமாட்டேன் - 2
தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்
தீராப் பகையை கொண்டாலும்
தேவர் அவரைத் திடமாக
தேடும் எனக்கு குறையேது - 2
ஒன்றே இறைவன் வேண்டுகிறேன்
ஒன்றே அடியேன் தருகின்றேன்
தேவன் உனது திருமுன்னே
நாளும் வாழ அருள்வாயே - 2
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. இயேசுவின் அன்பை
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு - 2
கல்வாரி மலைக் கண்ணீர்
சொல்லிடும் அன்பு
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு - 2
சிலை என பிரமையில் நிறுத்திடும் அன்பு…
3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு
இயேசு என்னும் நாமம்
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை
ஏழிசையில் பாடுகின்றது - 2
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் - 2
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் - 2
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
வாழ்வை அளிக்கும் வல்லவா
வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்
தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்
போற்றுங்கள் ஆண்டவரை
போற்றுங்கள் ஆண்டவரை வாழ்த்துங்கள் அவர் பெயரை
பாடுங்கள் அவர் புகழை மகிழுங்கள் நினைத்து அவர் செயலை
அன்பும் அருளும் உள்ளவர் ஆண்டவர் - 2
1. உயர்ந்த இரக்கம் உள்ளவரை வாழ்த்துங்கள் - 2
அளவற்ற மேன்மை மிகுந்தவரை வாழ்த்துங்கள் - 2
சொற்களைக் கடந்த வல்லவரை வாழ்த்துங்கள் - 2
மக்கள் புகழுக்கு உரியவரை வாழ்த்துங்கள் - 2
2. வியத்தகு செயல் பல செய்தவரை வாழ்த்துங்கள் - 2
அச்சம் மிகுந்த செயலோனை வாழ்த்துங்கள் - 2
சினம் கொள்ளத் தாமதம் செய்பவரை வாழ்த்துங்கள் - 2
நன்மையைப் பொழியும் ஊற்றவரை வாழ்த்துங்கள் - 2
இயேசு நாமம் பாடப்பாட
இயேசு நாமம் பாடப்பாட
இனிமை பொங்குதே - அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம்
ஏங்கித் தவிக்குதே - 2
1. ஓங்கும் குரலைக்காக்க வேண்டும்
உன் நாமம் பாடவே - 2
என்னுள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன் அன்பில் வாழவே
என் தேவ தேவா வா
2. தூங்கும் விழிகள் தேற்ற வேண்டும்
வான்தீபம் காணவே - 2
உன் அன்பில் வாழவே
உன்னோடு சேரவே என்னில் நீ வாழ வா
என் தேவ தேவா வா.
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பிப் பார்க்க மாட்டேன் - 2
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய குருதியினாலே
வீடுதலை அடைந்தேனே
அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ
ஆதலில் குறையில்லை
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே;
விடுதலை அடைந்தேனே
தாயும் அவரே தந்தையும் அவரே
தரணியர் நமக்கெல்லாம்
சேர்கள் நம்மை செல்வழி நடத்தும்
தெய்வம் அவரன்றோ
ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
ஆறுதல் அடைந்தேனே
இயேசுவின் இருதயமே
இயேசுவின் இருதயமே என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே - 2
இறைவனுக்கு இதயமுண்டு
அந்த இதயத்தில் இறக்கமுண்டு
இறைவனுக்கு இதயமுண்டு
அந்த இதயத்தில் இறக்கமுண்டு
இயேசுவின் இருதயமே…….
என்றும் இறங்கிடும் இறைவன் இருப்பதினால்
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு
என்றும் இறங்கிடும் இறைவன் இருப்பதினால்
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு
இயேசுவின் இருதயமே…….
கடவுளின் கருணை உண்டு
அந்த கருணைக்கும் உருவம் உண்டு - 2
என்றும் உருவத்தில் உயிர்த்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
என்றும் உருவத்தில் உயிர்த்தெழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
இயேசுவின் இருதயமே…….
இயேசு என்னும் நாமம்
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை
ஏழிசையில் பாடுகின்றது - 2
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் - 2
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் - 2
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
இயேசு நாமம் பாடப் பாட
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே -அற்ர்
இல்லம் வாழ எந்தன் இதயம் ஏங்கித் தவிக்குதே - 2
1. ஓங்கும் குரலைக் காக்க வேண்டும் உன் நாமம் பாடவே - 2
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன்னன்பில் வாழவே என் தேவா தேவா வா
2. ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான் தீபம் காணவே - 2
உன்னன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே என் தேவா தேவா வா
இயேசுவின் திருநாம கீதம் என்
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே
சங்காக முழங்கிட வேண்டும் - 2
1. நான் பாடும் பாடல் நானிலம் எங்கும் எதிரொலித்திட வேண்டும் - 2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெறவேண்டும் உவகை பெறவேண்டும் - 2
2. பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின்
இணையில்லா திருநாமம் - 2
வாழவைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள்தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் - 2
இயேசுவே உந்தன் வார்த்தையால்
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே - 2
நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தேவனே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
2. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே - 2
வென்றிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
இறைவன் எனது மீட்பராம்
இறைவன் எனது மீட்பராம் – அவரே
எனக்கு ஒளியானார்
அவரைக் கோண்டு நான் வாழ
எவரைக் கண்டு பயமில்லை....
வாழ்வின் இறைவன் துணையானார்
வாழும் எமக்கு உயிரானார்
நீயோர் என்னை வதைத்தாலும்
தீமை அணுக விடமாட்டேன் - 2
தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்
தீராப் பகையை கொண்டாலும்
தேவர் அவரைத் திடமாக
தேடும் எனக்கு குறையேது - 2
ஒன்றே இறைவன் வேண்டுகிறேன்
ஒன்றே அடியேன் தருகின்றேன்
தேவன் உனது திருமுன்னே
நாளும் வாழ அருள்வாயே - 2
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் - 2
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. இயேசுவின் அன்பை
1. அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு - 2
கல்வாரி மலைக் கண்ணீர்
சொல்லிடும் அன்பு
2. அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு - 2
சிலை என பிரமையில் நிறுத்திடும் அன்பு…
3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவன்பு