காலை இளங்கதிரே
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு -2
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு
2. வருங்குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து -2
சிரமே தாள் பணிந்து சிந்தனையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்
திருக்குலமே எழுந்திடுக
1-திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் -2
ஆஹா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே -2
2.ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மைப் படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
குழலோடும் யாழோடும்
குழலோடும் யாழோடும் இனிதான தமிழோடும்
தேவாதி தேவனைப் புகழ்ந்தேத்துவோம் 2
-
திரியேக தேவனுக்கு புகழாரங்கள்
புவி ஆளும் வேந்தனுக்கு புதுப்பாடல்கள்
1. ஆண்டவரே நல்ல மேய்ப்பனாம்
நாமெல்லாம் அவரது ஆடுகளாம் -2
2. வாழ்வினை ஈந்தவர் ஆண்டவராம்
நாமெல்லாம் அவரது குழந்தைகளாம் -2
தமிழால் உன் புகழ் பாடி
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா -2
1. எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனையாள்பவா -2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு -2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா -2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே -2
நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
வாருங்கள் அன்பு மாந்தரே
வாருங்கள் அன்பு மாந்தரே
பலிசெலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் -2
1. இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் -2
ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே - 2
அருள்வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்
2. அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறவார் -2
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றான் -2
தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்று திரும்புவோம்
தலைவா உனை வணங்க
தலைவா உனை வணங்க
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
அகல்போல் எரியும் அன்பு அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் - 2
நீர்போல் தூய்மையையும் என் நினைவில் ஓடச்செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னை சீக்கிரம் தூக்கிவிடும் -2
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா (2)
1. பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் - 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்
சக்தியானவா ஜீவநாயக
சக்தியானவா
ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா - 2
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா
1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா
ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா
திக்கனைத்துமே உன்னை எதிரொலிக்க வா
எதிரொலிக்க வா உன்னை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா
உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா
2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா
ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா
பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா
ஒன்று கூடுவோம் ஒன்றாய்ப் பாடுவோம்
ஒன்று கூடுவோம் ஒன்றாய்ப் பாடுவோம்
ஆண்டவன் இயேசுவின் பலியில் இணைவோம் (2)
நம் இறைவனைப் போற்றுவோம்
நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம்
திருப்பலியில் கலந்திடுவோம் (2)
1. இரக்கத்தைப் பொழிந்து பாவத்தைப் போக்கும்
மன்னிப்பு வழிபாடு
இறைவனின் குரலை இதயத்தில் ஒலிக்கும்
இறைவாக்கு வழிபாடு
இயேசுவின் உடலைக் குருதியை உணவாய்
உட்கொள்ளும் வழிபாடு
வாழ்வில் ஆனந்தம் மலர்ந்திடச் செய்யும்
நன்றியின் வழிபாடு - நம் இறைவனை
உயிருள்ள வழிபாடு
ஆண்டவர் இயேசுவை மீட்பராய் ஏற்பது
இறைவனின் வெளிப்பாடு
கடவுளைத் தொழுவதும் மனுக்குல சேவையும்
சமநிலைப் பண்பாடு
இயேசுவின் சீடராய்ச் சான்றுகள் பகர்வது அழகிய நிலைப்பாடு
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் (2)
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளை போற்றிப் பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப்புகழ்வோம்
1. இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
அன்பெனும் மழையால் பலன் கொடுப்போம்
அனைவர்க்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் (2)
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம் - கொண்டாடுவோம்
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்புப் பணியினில் மகிழ்ந்திடுவோம்
தூயநல் ஆவியில் கனிகொடுப்போம் (2)
உயிர்தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் - கொண்டாடுவோம்
குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவோம் தன்னலம் மறந்து பிறநலம் காக்கும் திருச்சபை ஆகிடுவோம் நாம் வருவோம் பலியில் இணைவோம் இறையன்பில் நாமும் வளர்வோம்
கடவுளைத் தேடும் அறிவே உலகில் ஞானத்தின் முதல்நிலை-அந்த ஞானத்தில் நிலைத்து தியாகத்தில் வாழ்ந்தால் அதுவே இறை நிலை இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர இறைமக்கள் வருவோம் இறைவனைப் புகழ்வோம்
நம்பிக்கையோடு வாழ்ந்திடும்போது மானுடம் உயர்வு பெறும்-இறை நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும்போது வாழ்வே முழுமை பெறும் தந்தையை நம்பி தன்னுயிர் தந்த இயேசுவின் பலியில் நாமும் இணைவோம்
உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் (2)
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் (2)
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் -2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை (2)
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே -2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் இயேசு
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்
அழைக்கும் இறைவன்
அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2)
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2)
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2)
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்
அருட்கரம் தேடி
அருட்கரம் தேடி
உன் ஆலய பீடம்
அலை அலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் (2)
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2)
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா
உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ
நிதம் வருமோ ஒளி இருக்க (2)
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
2. ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றது
தெய்வீகக் கரம்தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ
துயர் தருமோ துணை இருக்க (2)
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
அணி அணியாய் வாருங்கள்
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2)
1. அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணைநின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவர் இல்லம் செல்வோம் (2)
என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர
அருள் வேண்டி பலியிடுவோம் (2)
உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)
கானமும் காற்றும் வேறில்லையே - 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே
விடியலின் பனித்துளி மிதிபடவே - உம்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)
மனதினைக் காக்கும் மாண்புடனே (2)
மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்
இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்
இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்
மறைமக்கள் யாவரும் கூடுங்கள்
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
அவர் பெயர் சொல்லி வாழ்த்துங்கள்
இறைவா இதோ வருகின்றோம் - 2
1.இறைவன் நம்மை தேர்ந்தெடுத்தார்
கறையில் குலமாய் மாற்றி விட்டார் (2)
இருளில் நின்று விடுவித்தார்
அரியதம் ஒளிக்கு நமை அழைத்தார்
இன்றவர் புதல்வர் யாரில்லை (2)
அன்று நாம் இரக்கம் அறியவில்லை
இன்றவர் இரக்கம் யாருக்கில்லை
புதுமை தேடுகின்ற இதயங்களே
புதுமை தேடுகின்ற இதயங்களே
புதுப் பலியினில் கலந்திட வாருங்களே (2)
புவியின் ஆண்டவர் இருக்கின்றார் அவர்
புனித இதயங்களில் பிறக்கின்றார் (2)
எழுக எழுக இறைகுலமே இங்கு
இறைவனின் ஆசி அடைந்திடவே (2)
1. இடர்படும் இறைவனின் ஊழியரே நம்
இறைவனின் பணியினை ஏற்றிடவே (2)
இகமதில் இனிதே அழைக்கின்றார் - 2
தலைவன் தங்கத் தலைவன் இயேசுவின் வழியினில்
இந்தத் தரணியை நாளும் வழிநடத்திடவே பணிக்கின்றார்
எங்கும் எளியோர்க்கு நற்செய்தி உரைத்திடவே (2)
அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவே -2
உதயம் தேடும் இதயங்களெல்லாம் உண்மை விடுதலை
அடைந்திடும் நிலையை உன் வழியே அவர் காண்கின்றார்
No comments:
Post a Comment