tamil christians songs

Monday, May 24, 2021

காணிக்கை பாடல்கள் / kaanikkaI paadalkal

 

 

 1)

என் இயேசு என்னைக் கேட்கிறார்

என் இயேசு என்னைக் கேட்கிறார் நீ
என்ன தருவாயோ என்று
என் கரங்களை ஏந்திச் செல்வேன்
என் வாழ்வினை அவரில் தந்தேன்

1. பொன் பொருளும் எனக்கு இல்லை
உன் அருட்பாதம் பணிந்து வழங்க (2)
என் ஆன்ம கதவைத் திறந்தேன்
என் வாழ்வை முழுதும் தந்தேன்
நிலையாக என்னைத் தந்தேன்

2. மணம் கமழும் மலர்களானேன்
உன் திருக்கோயில் தீபமானேன் (2)
அன்பென்னும் பாதை அறிந்தேன்
அருள் வாழ்வின் மகிழ்வை உணர்ந்தேன்
திருவாழ்வில் என்றும் மகிழ்வேன்

 2)

காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்

காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்

இறைவா எம்மையும் ஏற்றிடுவாய் (2)
ஏற்பாய் இறைவா இறைவா ஏற்பாய் -2

1. உழைப்பின் பயனை உம்மிடம் தந்தேன்
ஏற்பாய் நீ என் இறைவா (2)
பணிகளில் வருகின்ற தடைகளையும் - 2
பலியென ஏற்பாய் என் இறைவா

2. சிந்தனை சொல் செயல் நலன்களும் தந்தேன்
ஏற்பாய் நீ என் தலைவா (2)
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே -2
உன் பதம் ஏற்பாய் என் இறைவா

 

 3)

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா
உள்ளதை எல்லாம் எடுத்து வந்தேன் - அதில்
நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
எனை ஏற்றிடுவாய் இறைவா
உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
எரியும் மெழுகென உருகி ஒளி தரவே
என்னையே முழுவதும் தருகின்றேன்

2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே
நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே
என்னையே முழுவதும் தருகின்றேன்

 4)

எது வேண்டும் உனக்கு இறைவா

எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா
எது வேண்டும் எது வேண்டும்

1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன்
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா

2. பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன்
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா

 

 5)

உனக்கென நான் தரும் காணிக்கையை

 

உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா (2)
பலியென எனை நான் தருகின்றேன் -2 உன்
பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் -2

1. உழைப்பின் கனி இது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக (2)
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக -2 உன்
படைப்பினில் சிறந்ததைத் தருகின்றேன் - 2

2. உடல்பொருள் ஆவி உனக்காக
உன் பணி புவிதனில் நிறைவாக (2)
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக 2 நான்
மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் -2

 

 6)

ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே

ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே
வாழ்வும் செயலும் சிந்தனையும் வாஞ்சையோடு அளிக்கின்றேன்
ஏற்றருள்வீர் எம் பிதாவே - 2

1. நீளக் கிண்ண இரசமதிலே நீர்த்துளி போலே கலந்து
நேச இயேசுவின் பாசத்திலே நிரந்தரமாய் நான் நிலைத்திடவே
ஆசைக்கொண்டேன் அருள்புரிவீர் - 2

2. இன்றும் என்றும் உம்மிடமே இயேசுவே நான் வாழ்ந்திடுவேன்
இனிமேல் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்
என்ற வரத்தை எனக்களிப்பீர் -2

 

 

 7)

கரம்  விரித்து  காணிக்கை  எடுத்து

 கரம் விரித்து காணிக்கை எடுத்து    -2

வரம் கேட்டு அப்பமும் கொடுத்து    -2

இரசங்கள் யாவும் பானம் அளித்து   -2

சிரம் பணிந்தோம் தந்தாய் ஏற்பாய்

அப்படியே ஆகட்டும்              -2

 

நிலம் அளித்த பலனை ஏற்று       -2

நலம் நாம் பெற எம்மைக் கண்ணுற்று -2

குலம் தழைக்க நித்தியம் பெற்று    -2

பலன் அளிப்பாய் உணவாய் ஏற்று

அப்படியே ஆகட்டும்              -2 

 

விளங்கச் செய்யும் அன்பிலக்களித்து  -2

உள்ளங்கள் மகிழ்ந்து ஒன்றாய் பழுத்து-2

பழங்கள் யாவும் பானமாய் அளித்து   -2

களங்கமில் இரசம் தந்தோம் ஏற்பாய்

அப்படியே ஆகட்டும்              -2

 

 8)

 அர்ப்பண மலராய் வந்தே

 அர்ப்பண மலராய் வந்தேன்

அர்ச்சனை ஆக்கினேன் என்னை
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும்
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன்

1. கோதுமை மணியாய் மடிந்து - என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன்
என்னுடல் உன்னுடலாகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே

 

 9)

படைத்ததெல்லாம் தரவந்தோம்

படைத்ததெல்லாம் தர வந்தோம்
பரம்பொருளே உம் திருவடியில்

உம் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
எம் வாழ்வினிலே ஒளி வீசும்

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே

தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்
தாழ்ந்து பணிந்து தருகின்றோம்

வாழ்வினில் வருகின்ற புகழெல்லாம்
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே

கருணையின் தலைவா ஏற்றிடுவாய்
கனிவாய் உவந்து தருகின்றோம்

 

 

 10)

 

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்

 

வழங்கிட கனியோ உணவோ இன்றி

வாடிடும் வறியோர் பலர் இறைவா } 2

வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி

வேறெதும் இல்லா நிலை இறைவா

 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை

உன்னருள் இவர்க்காய் கேட்க்கின்றோம் } 2

எங்கள் மனம் பொருள் ஆற்றல்  அனைத்தையும் இவர்தம்

மனதுயர் நீங்கப் படைக்கின்றோம்

 

 11)

 

காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே

 

 12)


 

அன்பின் பலியாய் ஏற்பாய் 

அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமைப் - 2
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 - எமைத்
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2
உனில்
படைத்தோம் படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 - தூய்மை நிறைந்திருக்க

13)

எல்லாம் தருகின்றேன் தந்தாய்
 
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் - 2

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்கு காணிக்கை - 2
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் - 2


14)

படைத்ததெல்லாம் தரவந்தோம்

படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் --2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே  --2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்  --2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம்   தருகின்றோம்  --2

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே --2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய்  --2
கனிவாய் உவந்து தருகின்றோம்  தருகின்றோம்  --2

15)

எதை நான் தருவேன் இறைவா

எதை நான் தருவேன் இறைவா - உன்
இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா
குறை நான் செய்தேன் இறைவா - பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே - நீ
கல்வாரி மலையில் இறந்தாயோ
பாவம் என்றொரு விஷத்தால் - நான்
பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உன் திருப்பாடுகளால் - என்னைத்
தேற்றிடவோ நீ இறந்தாயோ

16)

 அடியோர் யாம் தரும் காணிக்கையை

அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

பாவியென்றெம்மைப் பாராமல் - யாம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் --2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  --2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு - பின்
வாழ்வினில் எமக்கென்று எது உண்டு --2
என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ
எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

 17)

என் இயேசு என்னைக் கேட்கிறார் நீ

என் இயேசு என்னைக் கேட்கிறார் நீ
என்ன தருவாயோ என்று
என் கரங்களை ஏந்திச் செல்வேன்
என் வாழ்வினை அவரில் தந்தேன்

1. பொன் பொருளும் எனக்கு இல்லை
உன் அருட்பாதம் பணிந்து வழங்க (2)
என் ஆன்ம கதவைத் திறந்தேன்
என் வாழ்வை முழுதும் தந்தேன்
நிலையாக என்னைத் தந்தேன்

2. மணம் கமழும் மலர்களானேன்
உன் திருக்கோயில் தீபமானேன் (2)
அன்பென்னும் பாதை அறிந்தேன்
அருள் வாழ்வின் மகிழ்வை உணர்ந்தேன்
திருவாழ்வில் என்றும் மகிழ்வேன்

 

 

 18)

காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்

காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்
இறைவா எம்மையும் ஏற்றிடுவாய் (2)
ஏற்பாய் இறைவா இறைவா ஏற்பாய் -2

1. உழைப்பின் பயனை உம்மிடம் தந்தேன்
ஏற்பாய் நீ என் இறைவா (2)
பணிகளில் வருகின்ற தடைகளையும் - 2
பலியென ஏற்பாய் என் இறைவா

2. சிந்தனை சொல் செயல் நலன்களும் தந்தேன்
ஏற்பாய் நீ என் தலைவா (2)
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே -2
உன் பதம் ஏற்பாய் என் இறைவா

 19)

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா
உள்ளதை எல்லாம் எடுத்து வந்தேன் - அதில்
நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
எனை ஏற்றிடுவாய் இறைவா
உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
எரியும் மெழுகென உருகி ஒளி தரவே
என்னையே முழுவதும் தருகின்றேன்

2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே
நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே
என்னையே முழுவதும் தருகின்றேன்

 20)

அர்ப்பண மலராய் வந்தேன்

அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும்
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன்

1. கோதுமை மணியாய் மடிந்து - என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன்
என்னுடல் உன்னுடலாகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே

 21)

எது வேண்டும் உனக்கு இறைவா

எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா
எது வேண்டும் எது வேண்டும்

1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன்
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா

2. பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன்
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா

 22)

உனக்கென நான் தரும் காணிக்கையை

உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா (2)
பலியென எனை நான் தருகின்றேன் -2 உன்
பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் -2

1. உழைப்பின் கனி இது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக (2)
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக -2 உன்
படைப்பினில் சிறந்ததைத் தருகின்றேன் - 2

2. உடல்பொருள் ஆவி உனக்காக
உன் பணி புவிதனில் நிறைவாக (2)
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக 2 நான்
மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் -2

 

 

 

 23)

 

ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே

 

ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே
வாழ்வும் செயலும் சிந்தனையும் வாஞ்சையோடு அளிக்கின்றேன்
ஏற்றருள்வீர் எம் பிதாவே - 2

1. நீளக் கிண்ண இரசமதிலே நீர்த்துளி போலே கலந்து
நேச இயேசுவின் பாசத்திலே நிரந்தரமாய் நான் நிலைத்திடவே
ஆசைக்கொண்டேன் அருள்புரிவீர் - 2

2. இன்றும் என்றும் உம்மிடமே இயேசுவே நான் வாழ்ந்திடுவேன்
இனிமேல் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்
என்ற வரத்தை எனக்களிப்பீர் -2

 

 24)

 

கரம்  விரித்து  காணிக்கை  எடுத்து

 

கரம் விரித்து காணிக்கை எடுத்து    -2

வரம் கேட்டு அப்பமும் கொடுத்து    -2

இரசங்கள் யாவும் பானம் அளித்து   -2

சிரம் பணிந்தோம் தந்தாய் ஏற்பாய்

அப்படியே ஆகட்டும்              -2

 

நிலம் அளித்த பலனை ஏற்று       -2

நலம் நாம் பெற எம்மைக் கண்ணுற்று -2

குலம் தழைக்க நித்தியம் பெற்று    -2

பலன் அளிப்பாய் உணவாய் ஏற்று

அப்படியே ஆகட்டும்              -2 

 

விளங்கச் செய்யும் அன்பிலக்களித்து  -2

உள்ளங்கள் மகிழ்ந்து ஒன்றாய் பழுத்து-2

பழங்கள் யாவும் பானமாய் அளித்து   -2

களங்கமில் இரசம் தந்தோம் ஏற்பாய்

அப்படியே ஆகட்டும்              -2

 

 

 25)

என் ஆன்மா இறைவனையே

 

என் ஆன்மா இறைவனையே
ஏற்றிப் போற்றியே மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

 

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரை
தயையுடன் கண்கள் நோக்கினார்
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப் பேறுடையாள் என்றிடுமே

 

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார்
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவருக் கஞ்சுவோர்க் கிரக்கமாகும்

 

3. கரத்தின் வல்லமை கொண்டே அவர்
செருக்குற்றோரை சிதறடித்தார்
வலியவர் அரியணை நின்று விழ
தாழ்ந்தவர் தம்மை உயர்த்தி விட்டார்

 

4. பசித்தவர் தமக்கு நலமீந்து
செல்வரை வெறுமையாய் அனுப்பி விட்டார்
முன்னோர் தமக்கு உரைத்தது போல்
ஆபிரகாமும் சந்ததியும்

 

5. இரக்கம் பெறவே என்றென்றும்
இஸ்ராயேல் மக்களை ஆதரித்தார்
தந்தை திருமகன் ஆவியரும்
என்றும் மகிமை பெற்றிடவே

 

 26)

பலன் கொடுப்பீர்

 

பலன் கொடுப்பீர்

நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல்
பலன் கொடுப்பீர்
வழியோரமா? நான் கற்பாறையா?
முள்புதரா? நான் நல்ல நிலமா?

1.
இயேசுவின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன்
பறித்திடுவான்

2.
மண்ணில்லா பாறை நிலமாகும்
மனதில் நிலையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால

வெயிலில் வசனம் கருகி விடும்

3.
முட்செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள்
நெறித்திடவே
இறைவனின் வார்த்தை
வளரவில்லை
முட்கள் வாழ்க்கையை
நெருக்கிவிடும்

4.
இயேசுவின் வார்த்தை
உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட
நிலமாவார்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம்

 

 27)

தொடும் என் கண்களையே

 

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே

இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே

இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே
தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே

இயேசுவே - 2

தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே

இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே

இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

 

 28)

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

 

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே

1.
காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே

 

 

 29)

அஞ்சாதே அஞ்சாதே

 

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

 

1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
எந்த நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

 

2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

 

 30)

அன்பு செய்யுங்கள்

 

அன்பு செய்யுங்கள் - 4 (2)
நான் அன்பு செய்ததுபோல அன்பு செய்யுங்கள் - 2
புனிதமான புதிய கட்டளை அன்பு செய்யுங்கள்
சாதி சமய வெறிகள் மறைய... மனித நேயம் மண்ணில் மலர...
குடும்ப வாழ்வில் ஒன்றி மகிழ... புதிய வாழ்வை உலகில் வழங்க

 

 31)

அஞ்சாதே தேவன் இயேசு

 

அஞ்சாதே தேவன் இயேசு நம்மோடு
எந்தத் துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும்
தேவன் இயேசு நம்மோடு - அஞ்சாதே - 2

 

1. குன்றும் அசைந்து போகலாம் - எந்தக்
குகையும் பெயர்ந்து போகலாம் - 2
அவர் அன்பு அது மாறாதது
எந்த நிலையிலும் அது மறையாதது - எந்தத் துன்பம்...

 

2. தாய் நம்மை மறந்திட்ட போதிலும் - நம்
தந்தை வெறுத்திட்ட போதிலும் - 2
அவர் அரணாய் நம்மில் இருக்கின்றார்
தினம் அன்பை நம்மில் பொழிகிறார் - எந்தத் துன்பம்

 

 32)

அம்மையப்பன் உந்தன் அன்பே

 

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் - 2
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் – 2

 

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் -2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் (2)

 

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் -2
நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் 2

 

 33)

அமைதியின் தூதனாய்

 

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2
அன்பனே இறைவனே என்னிலே வாருமே
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே

 

1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

 

2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்

 

3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2
கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்
தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்

 

 34)

அமைதியின் தெய்வமே இறைவா

 

அமைதியின் தெய்வமே இறைவா
என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய் யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2

 

1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி - 2
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார் - 2
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2

 

2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி - 2
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் - 2
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2

 

 35)

அழகான பா ஒன்று நான் பாடவா

 

அழகான பா ஒன்று நான் பாடவா
அன்பே என் அரசே உன் அருள் வேண்டவா
எந்நாளும் என் ஜீவன் நீயல்லவா
என் தெய்வம் நீ தந்த பொருளல்லவா

 

1. கார்காலமேகம் பனித்தூறல் தூவ
கானத்துக் குயில்கள் கீதங்கள் பாட - 2
என் ஜீவனே என் உயிர் நேசனே
எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே

 

2. மணம் வீசும் மலர்கள் ... மன்னன் புகழ் பாட ...
மரகத வீணை மனதினை உருக்க - 2
என் ஜீவனே

 

 36)

அன்பே கடவுள் என்றால்

 

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

 

1. மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா -2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

 

2. இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா -2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா

 


 

 

 

No comments:

St.Lamberti Kirche in Munster Germany

  https://youtu.be/7sdDIGNnPRQ?si=rP7HK0oRqzdOoj2O