tamil christians songs

Monday, May 24, 2021

தூய ஆவி பாடல்கள் / Parusuththa aavi paadalkal

 

 

அக்கினி மயமே பரிசுத்த ஆவியே

அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
எரிதணலாய் எழும்பிடுவீர் அப்பா நிரப்பிடுவீர் (2)

1. அணைப்பவரே ஆறுதல் தருபவரே
அதிசயம் செய்பவரே எங்கள் துணை நீரே

2. எந்தன் உள்ளம் பாழாய் போனதையா
புதிய இதயத்தையே என்னுள் மலரச் செய்யும்

3. அபிசேக முத்திரை ஆனவரே
தாழ்ச்சியாய் வாழ்ந்திடவே அன்பாய் வழிநடத்தும்

 

 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே -2

1. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மதாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

2. உமது வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

3. ஆண்டவன் ஆவி என்மேல் எழுந்து வந்துள்ளார்
அபிசேகம் செய்து இறைவனின் சாயலை
எனக்கு வழங்கியுள்ளார்

 

     ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலுமல்ல

ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலுமல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே - 2 (2)

1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே

2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

 ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா (2)
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே - 2
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் - 2

1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே(2)
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் -2
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே2

2. ஜீவத்தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே (2)
கனிதந்திட நான் செழித்தோங்கிட -2
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம்பெற்றிட -2

 

 

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா (2)

ஆவியானவரே...
ஆவியானவரே...
பரிசுத்த ஆவியானவரே (2)

1. எப்படி நான் ஜெபிக்கவேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே (2)
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே... (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின்

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கிறேன் - இறைவா
ஆராதனை செய்கிறேன் (2)

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றிதுதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

      

 

        வானத்திலிருந்து வையம் எழுந்து

வானத்திலிருந்து வையம் எழுந்து
புனித ஆவியே வருக
ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்றும்
மாசற்ற அன்பே வருக - 2

1. உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே
உண்மையின் வடிவே வருக - 2

2. கீழ்திசை வானில் வாழ்த்திசை பாடும் காலைக் கதிரே வருக
ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆகும்
ஆனந்த நிலையே வருக - 2

3. மனிதன் மனதில் பனியெனத் துலங்கும்
மாணிக்க விளக்கே வருக
இனிய நல்வாழ்வை உவப்புடன் வழங்கும்
இன்னருள் பெருக்கே வருக - 2

       என் ஆவியும் தூய ஆவியும்

என் ஆவியும் தூய ஆவியும்
என்னுள்ளே இணைந்துவிட்டால் - ஆனந்தம் ஆனந்தமே -2

1. ஆனந்தம் என்று சொல்வதா அதை
அருட்பெருக்கு என்றுரைப்பதா
இன்ப வனம் என்று கூறவா அதை
இறையாற்றல் என்றழைப்பதா
பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம் 2. தீ நாக்கு தூய ஆவியா தீப்பிழம்பு எந்தன் ஆவியா
தீமைகளைச் சுட்டெரிக்குமே அதன்
தீச்சுடரில் வளர்ச்சி தோன்றுமே
பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம்

 

 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
 
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - 2


உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே - 2
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - 2


சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே - 2
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - 2


ஆவியின் வரங்களினால் எம்மையும் நிப்பிடுமே - 2
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2
 

 

வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2

இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2

பெந்தேகோஸ்தே நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2
வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் – 2

 

புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும்

புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும்
புனிதத்தின் ஆவியே
வரங்களைப் பொழியும் வளம்நிறை ஊற்றே பரிசுத்த ஆவியே(2)
மண்ணின் முகத்தைப் புதுப்பிக்க வருவீர் - நிறை
மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)

1. ஞானம் நிறைந்த சொல்வளமே
நலம் தரும் நம்பிக்கை அருட்கொடையே (2)
பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தே
தேவ கனிகளால் தேற்றும் அதிசயமே - மண்ணின்...

2. வானம் திறந்த தீச்சுடரே அருட்கொடை தந்திடும் அருட்சுகமே -2
குளிரினைப் போக்கும் அனல்காற்றே - வாழ்வின்
குறைகளைத் தீர்க்கும் நிறையருளே (2)- மண்ணின்...

 

 

அருங்கொடை நாயகரே

அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே

தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியால்

என்னை இன்று நிரப்புமையா

உம் சித்தம் போல் நடத்துமைய்யா

ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா

அணலாய் தணலாய் உருமாற்றவா

 

படைப்பினை ஆட்கொண்டு உயிர் அளித்தீர்

தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர்

என்னையும் ஆட்கொள்ள வாருமையா

ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா

அணலாய் தணலாய் உருமாற்றவா

    

ஜோர்தானில் வெண்புறாவாய் இறங்கி வந்தீர்

இயேசுவை ஆட்கொண்டு உறுதி தந்தீர்

என்னையும் ஆட்கொள்ள வாருமையா

ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா

அணலாய் தணலாய் உருமாற்றவா

 

அக்கினியாய் பெந்தகோஸ்தே நாளில் வந்தீர்

அன்னையையும் சீடரையும் ஆட்கொண்டீர்

என்னையும் ஆட்கொள்ள வாருமையா

ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா

அணலாய் தணலாய் உருமாற்றவா

No comments:

St.Lamberti Kirche in Munster Germany

  https://youtu.be/7sdDIGNnPRQ?si=rP7HK0oRqzdOoj2O