ஆயிரம் நன்றி சொல்வேன்
ஆயிரம் நன்றி சொல்வேன் - உனக்கு
பாயிரம் பாடிடுவேன்
நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனே
பாரெல்லாம் போற்றிடுவேன் - உன்
நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்
யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2)
பாவியாய் இருந்தேன் பாருலகில் நானே
கேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயே
வேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயே
மாலையாய் என் வாழ்வைச்
சூட்டுவேன் உமக்கே (3)
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2)
தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேனே
தெவிட்டா இன்பத்தில் நிலைக்க வைப்பாயே
தேவனே உன்னில் நான் மகிழ்ந்திடுவேனே
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல்
இதழால் நன்றி சொன்னால்
இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ
இதயத்தில் நன்றி சொன்னால் யேசுவுக்காகிடுமோ
வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி
மனத்தாழ்சியும் தரித்தரமும் தயவும் காட்டும் நன்றி
உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து
தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு
சிலுவைக் கொடியேந்தி ஜெகத்தை மீட்டுயிர்த்து
சிலுவைப் பலன்யாவும் நமக்கே ஈந்தவர்க்க
மன்னவரின் மன்னருக்கு மனுவேல் அரசனுக்கு
பொன்முடி தரித்தவருக்கு பூமியை மீட்டவர்க்கு
ஆறுதல் மொழி கூறி அன்பின் வழி காட்டி
உயிரும் உண்மையுமாய் உறவுகள் தருபவர்க்கு
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் (2)
1.
இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லா பலியில் இறைவனை உண்டு (2)
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ.. 2
நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்
2.
உண்மை வழியை உலகுக்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட (2)
அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ.. 2
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு
எத்துணை நன்று எத்துணை நன்று
எத்துணை நன்று எத்துணை நன்று
அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது - எத்துணை நன்று - 2
1. ஒரு கொடிக் கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று
அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் ... ... (2)
ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் ... ...
இன்று ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக் கொண்டோம்
2. புதியதோர் உலகம் கண்டிடுவோமே ...
...
அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே ...
... (2)
பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே ...
...
இன்று இறைவனில் ஒன்றாய் இணைந்திடுவோமே
நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன்
நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே
1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே -2
(2)
அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
2. மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே -2
(2)
உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) 3. தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (நன்றி சொல்)
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன்
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன்
1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
மலர்ப்பாக்கள் பல கோடி உருவாக்கினாய்
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே - அதில்
எழும் இராகம் எல்லாமுன் புகழ்பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. இளங்காலைப் பொழுதுந்தன் புகழ்பாடுதே - அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
அலை ஓயாக்கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச்சரம்
நன்றியால் துதிபாடு
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
உள்ளதால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு)
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் – 2
– (நன்றியால் துதிபாடு)
2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே – 2
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு – 2
– (நன்றியால் துதிபாடு)
3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் – 2
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் – 2
– (நன்றியால் துதிபாடு)
4. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் – 2
– (நன்றியால் துதிபாடு)
5. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் – 2
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் – 2
– (நன்றியால் துதிபாடு
நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)
1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
2. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
உம்மை வாழ்த்துவோம்
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் - உம்மை
ஏற்றுவோம் இறைவா உம்மை ஏற்றுவோம் இறiவா
இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில்
இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய்
எக்காளத் தொனியுடனே நம் இறைவனை ஏற்றுவோம்
மத்தளத்துடனே யாம் நம் இறைவனைப் போற்றுவோம்
யாழோடும் வீணையோடும் நம் இறைவனைப் போற்றுவோம்
புல்லாங்குழலோடும் நம் இறைவனைப் போற்றுவோம்
உம்மைப் போற்றிப் புகழுகின்றோம்
உம்மைப் போற்றிப் புகழுகின்றோம்
உம்மை வாழ்த்தி வணங்குகிறோம்
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நன்றி கூறி மகிழுகின்றோம் (2)
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -4
1. வல்லவரே நல்லவரே வானம் வையம் யாவும் படைத்தவரே (2)
வாழ்வு தர வந்தவரே -2 எம்மை வாழவைத்துக் காப்பவரே-2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 4
2. நேற்றும் இன்றும் மாறாதவரே நேசப் பிதாவிலே வாழ்ந்தவரே (2)
நேசம் காட்ட வந்தவரே -2 எம்மை நேசித்து வாழ்பவரே -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -4
3. ஆதிமுதல் வாழ்பவரே ஆதி அந்தமெல்லாம் இருப்பவரே (2)
ஆடு மேய்க்க வந்தவரே -2 புதிய ஆதாமாய் இருந்தவரே -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் -2
நன்றி நன்றி நன்றி என்று
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
1. வல்லவரே நல்லவரே
2. காண்பவரே காப்பவரே
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
6.
புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்
எத்துணை நன்று எத்துணை நன்று
எத்துணை நன்று எத்துணை நன்று
1.
ஒரு கொடி கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று
அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம்
ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம்
இன்று ஒரேவித அழைப்பை நாம் பெற்றுக்கொண்டோம்
2.
புதியதோர் உலகம் கண்டிடுவோமே எத்துணை நன்று
அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே
பிரிவினை பிணக்குகள் தீர்த்திடுவோமே
என்றும் இறைவனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
உன்னை நான் ஒருபோதும்
உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை
உனக்காக உன்னில் இருக்கின்றேன்
உன் அன்பன் இயேசுவே நான் இருக்கின்றேன்
உன் நண்பன் இயேசுவே அருகில் இருக்கின்றேன்
1.
பாவியாய் எனதன்பை மறந்து நீ சென்றாலும்
பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன்
2.
சோதனையில் வேதனையில் சோர்ந்து நீ துவண்டாலும்
அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன் உன்னை
3.
உண்மை நீதி வாழ்வினிலே எதிர்ப்பு நிதம் வந்தாலும்
உறுதி தந்து உன்னையே நான் உயர்த்திடுவேன் என்றும்
நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை
அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும்
அன்னையாய் தந்தையாய்
அருகில் இருந்து அணைக்கும் தேவனை
1.
கோடி துன்பம் வந்த போதும்
கொடிய நோயில் வீழ்ந்த போதும்
தேடிவந்து நம்மைக் காத்திட்டார்
வாடிய மலரைப் போல் வதங்கியே வீழ்ந்தாலும்
2.
உலகம் நம்மை வெறுத்த போதும்
கலகம் நம்மைச் சூழ்ந்த போதும்
விலகவில்லை அன்பர் இயேசுவே
நிலைகள் குலைந்தும் அலையாய் எழுகின்றார்
நன்றி பாடுவேன் இனிய இயேசுவே
நன்றி பாடுவேன் இனிய இயேசுவே
வாழும் நாளெல்லாம் போற்றிப் பாடுவேன்
என்னைத் தேடியே வந்த தெய்வமே
என்றும் உன்னையே வாழ்த்திப் பாடுவேன் (2)
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4
1. உயிரைத் தந்ததால் உருவம் தந்ததால்
உறவைத் தந்ததால் நன்றி இயேசுவே
வாழ்வைத் தந்ததால் வளமும் தந்ததால்
வாழ வைப்பதால் நன்றி இயேசுவே
உந்தன் அன்பை என்றும் பெறுவதால்
உன்னில் என்னை இணையச் செய்வதால் (2)
உந்தன் பாதையில் எந்தன் பாதங்கள்
வழிநடக்க ஆசி தந்ததால் - நன்றி நன்றி நன்றி இயேசுவே
2. தாயுமானதால் தந்தையானதால்
நண்பன் ஆனதால் நன்றி இயேசுவே
எந்த நாளிலும் என்னில் வாழ்ந்திடும்
சொந்தமானதால் நன்றி இயேசுவே
மன்னிக்கின்ற மனதைத் தந்ததால்
மனிதநேயச் சிந்தை தந்ததால் (2)
விடியல் நோக்கியே எந்தன் வாழ்வையே
அர்ப்பணிக்க ஆசி தந்ததால் - நன்றி நன்றி நன்றி இயேசுவே
போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும்
போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும் இறைவனையே
வாழ்த்தி மகிழ்ந்திடுவேன் வரங்களின் தேவனையே
நன்றி நன்றி நன்றி நன்றி
1. உலகைப் படைத்தாய் உயிரைத் தந்தாய்
உறவின் வழியாய் உனதருள் பொழிந்தாய்
அறிவைத் தந்தாய் ஆற்றல் தந்தாய்
உண்மை வழியில் வாழச் செய்தாய்
சுமைகள் ஏற்றாய் ஆறுதல் தந்தாய்
வீழ்ந்த போதும் தோளில் சுமந்தாய்
துன்பமோ துயரமோ என்ன செய்யும்
உனதருள் இருந்தால் நன்றி நன்றி
2. உந்தன் சிறகில் மறைத்துக் கொண்டீர்
உரிமை மகனாய் மேன்மை தந்தீர்
உண்மை அன்பில் மகிழச் செய்தீர்
எந்தன் மனதில் மாற்றம் தந்தீர்
பாதை மாறும் பொழுதினில் எல்லாம்
பரமன் உந்தன் ஒளியினைத் தந்தீர்
வாழ்ந்திடும் நாளெல்லாம் வல்ல தேவன்
உமதடி பணிவேன் நன்றி நன்றி
நன்றி பாடி நன்றி பாடி நாதனைப்
நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம்
நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப் பண் பாடிடுவோம்
நன்றி -2 என் இயேசுவே உமக்கு நன்றி
நன்றி -2 என் தேவனே உமக்கு நன்றி
1. அன்னை தந்தை அன்பினைத் தந்தாய்
அளவில்லாத ஆற்றல் தந்தாய் (2)
இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2
இதயத்தில் அமைதி தந்தாய் - 2 நன்றி
2. இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய்
இனிய நண்பனாய் துணையாய் நின்றாய் (2)
புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2
புதிய மனிதனாய் மாறச் செய்தாய் - 2 நன்றி
நன்றி கீதம் நான் பாடுவேன்
நன்றி கீதம் நான் பாடுவேன் இயேசுவே
நாளும் உந்தன் அன்பில் வாழுவேன்
நன்றி இறைவா நன்றி நாதா -2
1. புதுமையான அன்பு நீர் பொழிந்த தியாக அன்பு
புதிய வாழ்வு கண்டேன் நான் புதியவனானேன் (2)
அதனால் புதிய ராகம் மீட்டி புது ஜதியில் மேளதாளங்கட்டி
2. பயனில்லாத என்னில் நீ பரிவு பொழிந்த போது
பசுமை என்னில் கொண்டேன் நான் பலன்மிகக் கண்டேன் (2)
உந்தன் புனிதத் தேகம் இரத்தம்
என் இதயத் தாகம் தீர்ந்ததையா
நன்றி சொல்லி நாளும் பாடுவோம்
நன்றி சொல்லி நாளும் பாடுவோம் - கோடி
நன்மை செய்யும் இயேசு ராஜனை (2)
நமது வாழ்க்கையே உயர்ந்த நன்றியாம் - 2
நன்மை நெறியில் நாளும் நடந்து
நலன்கள் யாவும் நட்பில் பகிர்ந்த
1. விண்ணும் மண்ணுமே காணும் யாவுமே
கடவுள் தந்த கொடைகள் அல்லவா
வலிமை இழந்தவர் வாழ்வில் வசந்தம் பெறுவதும்
வள்ளல் இயேசு தயவில் அல்லவா (2)
அமைதி வரும் அருள் நிறையும் அவர் வரவில் புது உறவில்
அன்னை போல அன்பு காட்டி
நம்மைக் காக்கும் தேவன் பெயரை
2. கவலை யாவுமே கலைந்து போனதே
கண்ணைப் போல என்னை இயேசு காப்பதால்
சோகமில்லையே இனி சுகமே எல்லையே
தேற்றும் தெய்வம் தேடி வந்ததால் (2)
சுமை சுமக்கும் தோள்களுக்கு சுகம் தருவார் துணை வருவார்
அச்சம் நீக்கி அன்பு தந்து
அருளைப் பொழியும் தேவன் புகழை
நன்றி சொல்லி பாடிடுவோம்
நன்மை செய்த தேவனையே நாளெல்லாம் காத்து நடத்தும் இறைவனை நலமெல்லாம் ஈண்டு பகிரும் நாதனை .. கரத்தில் நமது பெயரைப்பொறித்து கண்மணியாய் காக்கின்றார் கல்லிலும் கால்கள் மோதாதபடியே கரம்பிடித்து நம்மை நடத்துகின்றார் வலப்புறம் ஆயிரம் விழுந்தாலும் இடப்புறம் ஆயிரம் விழுந்தாலும் தீமைகள் அணுகாது காத்திடுவார் |
|
சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே
அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே
வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
வழி அதை சுமந்தழைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.
சாத்தான் சோதித்திட - தேவ
உத்தர வுடன் வருவார்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.
No comments:
Post a Comment