அன்பின் தேவ நற்கருணையிலே அழியா புகழோடு
அன்பின் தேவ
நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப இரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழத் தயைபுரிவீர்
3. ஞானம் மிகுந்த எம் பாத்திரத்தில்
நல்லொளி பாய்ச்சும் இறைவனே நீர்
ஞாலமெல்லாம் இருள் நீங்கிடவே
நாடுகள் வீடுகள் எங்கணுமே
நலம் பல பொழிவீர் நல் தேவா
நற்கருணை வாழ் நாயகனே
அன்பின்
தேவநற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழிநடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்பரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீ ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளத்திடுவீர்
இளமையின் பொழிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்
மாண்புயர்
இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும் மறைந்து முடிவு
பெறுக
புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க விசுவாசத்தின் உதவி
பெறுக
பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக. ஆமென்
…………….
அருள் திரு தேவ தேவன் போற்றி
அருள் திரு தேவ
தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
அருள் நிறை தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
அருள் நிறை அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
அருள் நிறை சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
அருள் நிறை தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
அருள் திரு தேவ தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
No comments:
Post a Comment