tamil christians songs

Monday, May 24, 2021

தியானப் பாடல்கள்- 1 /thiyaanap paadalkal

 

அப்பா நான் தவறு செய்தேன்

அப்பா நான் தவறு செய்தேன்
உன் அன்பை உதறிச் சென்றேன்
நான் கெட்டலைந்து ஓடி வந்தேன்
என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் (2)

1. பாடிவரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும்
உன்னன்பில் மகிழ்ந்திருக்க நான்
உன்னைப் பிரிந்து நொந்தேன் (2)

2. சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர்
ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா (2)

 

 என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

- என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய் - 2

1. செந்நீர் வேர்வை சொரிந்தவரே என் ...

2. புண்படக் கசையால் துடித்தவரே என் ...

3. முள்முடி சூடிய மன்னவரே என் ...

4. துன்பச் சிலுவை சுமந்தவரே என் ...

5. தன்னுயிர் தியாகம் புரிந்தவரே என் ...

6. மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தவரே என் ...

 

 

சரணம் சரணம் இயேசு நாதா

சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம்

1. அகரம் நீயே ஆதியும் நீயே
இன்பமும் நீயே ஈசனும் நீயே

2. உண்மை நீயே ஊனும் நீயே
எண்ணும் நீயே ஈகமும் நீயே

 

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா 

  மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா
மன்னிப்பு தாருமே இறைவா (2)

1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்
மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்
வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்
ஆண்டவர் ஞானத்திற் கினிமையுண்டு
கண்டிக்கக் காலத்தைக் கடத்துகின்றார்
கண்டித்துக் கருணைச் சொல் கூறுகின்றார் - பாவி
திருந்திட அருள்கொடை வழங்குகின்றார்

2. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும் எடுத்துவைத்தால் - தேவன்
குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்
பாவத்தை வெறுத்துத் தள்ளிடுவோம்
ஆபத்தை விலக்கிச் சென்றிடுவோம்
ஆன்மாவை அவரிடம் காட்டிடுவோம் - அதன்
அவலங்கள் கழுவிட வேண்டிடுவோம்

           

 அஞ்சலி

என் தெய்வமே உனக்காகும் அஞ்சலி2
தீபாஞ்சலி, மலரஞ்சலி தூபாஞ்சலி

தீமையினை எரிக்கின்ற நெருப்பே
இருளினை அழிக்கின்ற விளக்கே
பொய்மையை ஒழிக்கின்ற வாய்மையே
மெய்மையில் நடத்துவாய் தீபாஞ்சலி

நிதம் காலை மலர்கின்ற மலரே
நுகர்வோரை மகிழ்விக்கும் மணமே
நிலையற்ற வாழ்வுக்கு சாட்சியே
நிறைவினை அருள்வாயே மலரஞ்சலி

நறுமணம் தருகின்ற தூபமே
நாதனின் பூஜைக்கு உதவும்
நலம் பல வழங்கும் நல்தேவன்
பணிக்காக வருகின்றோம் தூபாஞ்சலி

 

   

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு இயேசுவை
புகழ்ந்திடு காலையிலே
புகழ்ந்திடு பகலினிலே
புகழ்ந்திடு மாலையிலே
புகழ்ந்திடு இரவினிலே
புகழ்ந்திடு பொழுதெல்லாம்
புகழ்ந்திடு வாழ்வெல்லாம்

 

 

வாழிய மூவொரு இறைவா

 வா வாழிய மூவொரு இறைவா - 2
தூய மூவொரு இறைவா இறைவா ... ...
இணைந்த மூவொரு இறைவா இறைவா ... ...
படைக்கும் மூவொரு இறைவா இறைவா ... ...
மீட்கும் மூவொரு இறைவா இறைவா ... ...
அர்ச்சிக்கும் மூவொரு இறைவா இறைவா ழிய மூவொரு இறைவா

 

 

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

 வார்த்தையான இறைவனுக்கு    தீபத்தால அஞ்சலி
 
வாழ்வளிக்கும் வள்ளலுக்கு துhபத்தாலே அஞ்சலி                   

  வழியும் ஒளியும் ஆனவர்க்க மலர்களாலேஅஞ்சலி

 

                                 முடிவில்லாத வாழ்வைத் தேடி

முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசய்யா (2)

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ (2)
உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையோ இருள் இல்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர்தரும் உணவு என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ (2)
உம் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையோ துயர் இல்லையோ இறப்பில்லையோ

 

எல்லா காலத்திலும் எல்லா வேளையிலும்

 

எல்லா காலத்திலும் எல்லா வேளையிலும்
தேவா உம்மை நான் துதிப்பேன்

1. தந்தையும் நீயே தாயும் நீயே சொந்தமும் நீயே -2
எந்தன் பாக்கியமும் நீயே

2. ஆதியும் நீயே அந்தமும் நீயே ஜோதியும் நீயே -2
எந்தன் பாக்கியமும் நீயே

3. அன்பனும் நீயே நண்பனும் நீயே அனைத்தும் நீயே -2
எந்தன் பாக்கியமும் நீயே

4. ஒளியும் நீயே வழியும் நீயே உண்மையும் நீயே -2
எந்தன் பாக்கியமும் நீயே

 

தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என்பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்

என்குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்று கருதுவதை துணிந்து செய்தேன்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என்பாவம் தீர்ப்பாய் உன் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்

 

 

 ஆணிகொண்ட உம் காயங்களை

ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

அமைதி தேடி அலையும் நெஞ்சமே

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே (2)
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரன்றி வேறில்லையே

1. போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே (2)
காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே (2)

2. இறைவனே என் இதயமே இந்த
இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே (2)
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே (2) 

 

  தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா

தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா 
தனது பிள்ளை அவள் மறப்பாளோ 
தாய் மறந்தாலும் நான் மறவேனே 
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே 

குன்று கூட அசைந்து போகலாம் 
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் 
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே 
அசைவதில்லை பெயர்வதில்லையே 

தீ நடுவே நீ நடந்தாலும் 
ஆழ்கடலை தான் கடந்தாலும் 
தீமை ஏதும் நிகழ்வதில்லையே 
தீதின்றியே காத்திடுவேன் நான் 

கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே 
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே 
கழுகை போல நான் உனைத்தானே 
காலமெல்லாம் சுமந்து செல்வேனே -

 

 

   ஒரு தாய் தேற்றுவது போல்

  ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார்

அல்லேலூயா அல்லேலூயா (2)

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே -- (ஒரு தாய்...)
 
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார் -- (ஒரு தாய்...)

எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே -- (ஒரு தாய்...)
 
ஒரு போதும் கை விடார்
ஒரு நாளும் விலகிடார் -- (ஒரு தாய்...)---------------

 

 

 

 

...

 

        

             

 

 

 

 

 

No comments:

St.Lamberti Kirche in Munster Germany

  https://youtu.be/7sdDIGNnPRQ?si=rP7HK0oRqzdOoj2O