இயேசுகிறிஸ்துவின் விண்ணேற்பு.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு 40 நாட்கள் பலபேருக்கு காட்சிகொடுத்தார்.
நற்செய்தியை அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடைமையும் இயேசுகிறஸ்துவின் சீடர்களுக்கு இருந்தது. இயேசுகிறிஸ்துவின் சிலுவைமரணம் ,கல்லறையில் அடக்கம் ,அவரது உயிர்ப்பு ஆகியவற்றிற்கு கல்லறையில் நின்றுகொண்டிருந்து பரசவப்பார்வையில் இயேசுவை தரிசித்த மரியமதலேனா , மற்றும் சீடர்களும் தான் சாட்சிகள்.
இந்த நற்செய்தியை உலகம்எல்லாம் அறிவிக்க அவர்களுக்கு ஆவியிலே பெலன் தேவைப்பட்டது. அதாவது பாவத்தில் இருந்து மனம்திரும்புதல், சகலமக்களையும் சீடராக்குதல், தந்தை மகன் தூயஆவியின் நாமத்தில் திருமுழுக்கு அளித்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
திருமுழுக்கு யோவான் செய்த ஊழியம் , இயேசுகிறிஸ்து மனிதராக வந்து செய்த ஊழியம், இயேசுகிறிஷ்துவின் 12சீடர்கள் மற்றும் 70 சீடர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்த ஊழியம் , மற்றும் யோவான் பரலோக தரிசனத்தில் திருவெளிப்பாட்டை எழுதிமுடிக்கவேண்டியதற்கு வேண்டிய தூயஆவியின் பெலன், சீடர்கள் வேதசாட்சிகளாக மரிக்க அவர்களுக்கு தேவைப்பட்ட ஆவியின்பெலன், இவை அவர்களுக்கு தேவைப்பட்டதால் இவற்றிற்காகவே முன்குறித்தபடி இயேசு அவர்களை “உன்னதத்தில் இருந்துவரும் பெலனால் நிறைக்கப்படும் வரைக்கும் ஜெருசலேம் நகரிலே தங்கியிருங்கள் என்று சொல்லியிருந்தார்.
இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்;
நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்.
நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்
உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.
இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.