இயேசுகிறிஷ்துவின் பாடுகள், மரணம் , உயிர்ப்பு, / எமது மீட்பின் ஆரம்பம்.
தந்தை சுதன் தூயஆவியானவர் - இதுவே திரித்துவம் என்பது- அதாவது ஒரே இறைவன்.- இதை பலரால் புரிந்துகொள்ளமுடியாது தான்- தூயஆவியால் நிரப்பபட்ட எல்லோராலும் தூயஆவியின் கொடைகளை பெற்று புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை.
ஆதாம் ஏவாளை படைத்தது முதல் - அவர்களுக்கு அன்புகட்டளை கொடுத்து அழகிய இடத்தில் வைத்து - எல்லா உரிமைகளையும் கொடுத்து- ஒரேஒரு கட்டளையை மட்டும் - இதை செய்யவேண்டாம்- என்று கொடுத்தார்.
ஆண்டவராலே மிகுந்த அழகும் அறிவும் தாலந்துகளும் அமைய உருவாக்கப்பட்ட லூசிப்பர் என்ற தேவதூதன் பெருமை கொண்டு எண்ணிய எண்ணங்களை ஆண்டவர் அறிந்து, அவனுக்குரிய இடத்தில் இருந்து விலக்கினார். தனக்கு ஆதரவை தேடிவைத்த ஏனெய தேவதூதர்கள் கூட்டத்துடன் அவன் வெளியேறினான். அன்றிலிருந்து இறைவனால், அவரது ஆவியை ஊதி படைக்கப்பட்ட மனிதர் பரலோகத்தை நிரப்பகூடாது என்று திட்டம் கொண்டு- மனிதனை பாவம் செய்யவைத்து ஆண்டவரிடம் இருந்து பிரித்து- தனது கூட்டத்தோடு சேர்ப்பதே அவனது திட்டம்.-
ஆண்டவரின் உயிர்மூச்சை சுமந்து திரியும் மனிதனும் ஆண்டவரை விட்டு வழிவிலகி செல்கிறான்-
பிள்ளைகள் தம்அன்பைவிட்டு போனால் பெற்றோர் எவ்வளவு வேதனைபடுவார்கள். அவர்களை மீட்டெடுக்க எவ்வளவு போராடுவார்கள்.
எமது ஆண்டவரின் போராட்டமும் இதுதான். தனதுபிள்ளைகளை கூட்டிசேர்க்க மனிதஅவதாரம் எடுத்து மனிதரோடு மனிதனானார்.
பருசுத்த பெண் மரியாவை உருவாக்கி ,அவரை 3 வயதில் ஆலயத்திற்கு காணிக்கையாக கொடுக்கவைத்து - ஆலயத்தில் எல்லா இறைபுகழையும் அறியவைத்து- ஆண்டவரோடு படைப்பில் இணைந்திருந்த - திரித்துவத்தின் பரிசுத்தாவியானவரை மரியாவிற்கு துணையாளராக வைத்து -தேவதூதுவர்களை அவரோடு உதவிக்கு வைத்து- ஆண்டவர் தானே மனிதராக அவர்கருவில் வந்து பிறக்க மரியாவை உருவாக்கினார் என்பதே உண்மை.தெரிந்தெடுத்தார்.( ஆண்டவர் பருசுத்தர்பருசுத்தர்பருசுத்தர்) பருசுத்த இடத்தில் உருவாகி, உருவாகிய பெண் மரியாவும் இறுதிவரை பருசுத்தமாக இருந்தார் என்பதே உண்மை.( உடன்படிக்கை பெட்டியின் பரிசுத்தம்போல)
அவர்கருவில் வைக்கப்பட்டார். திரித்துவத்தில் ஒருவனானார்.
பருத்த குழந்தையை வளர்க்க உருவாக்க ஒரு வளர்புதந்தையாக நீதிபதியாகிய யோசேப்பு தெரிவுசெய்யபட்டார். நீதிமானாகிய யோயேப்பிற்கு இயேசுவை வளர்பதில் மட்டுமே கடைமை இருந்தது. சகோதரர்கள் என்ற வார்த்தையைவைத்து லூசிப்பர் மனிதஇனத்தைமட்டுமல்ல இயேசுவாகிய எமது ஆண்டவர்வந்து உருவாகிய இடத்தையும் களங்கப்படுத்துகிறான். பருசுத்தஆவியில்பெலன் இல்லாதவர்கள் அவதூறுகளை பேசி பாவத்தை கட்டிக்கொள்கிறார்கள்.
இறைஅரசை போதித்தார்.
ஆண்டவராகிய இயேசு இறைதிட்டத்தை நிறைவேற்ற12 வயதில் ஆலயத்தில் காணாமல்போகவைத்து- பழையஏற்பாடு வேதநூல்களை கற்று தெரிந்தவர்களுக்கே போதித்தது ஞானத்தின் பிறப்பிடம் அவர் என்பதாலே. .அதாவது இறைமகனே வேதவல்லுனர்களுக்கு இறைஅரசை அறிவித்தார்.
இயேசு மிகுதி 30 வருடங்களும் எங்கே இருந்தார் என்ன செய்தார் என்று லூசிப்பர் மனிதனை கேள்விகேட்கவைத்து அவதூறான கதைகளை நம்பவைப்பதையும் கேட்கின்றோம். இன்று எத்தைபிள்ளைகள்30 வயது தாண்டியும் பெற்றோருடன் இருக்கிறார்கள். இயேசு இறைமகன் தனது திட்டத்திற்கான நாள்வரும்வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து இருந்தார் என்றும், தந்தையின் தச்சுதொழிலுக்கு உதவியாக இருந்தார் என்றும, 30வயதுவரை இயேசுவும் சாதாரண மனிதர் கற்கும்மாதிரியே கல்விகற்றுவந்தார் ஞானத்தில் வளர்ந்தார் என்றும் பிறஏடுகளில் எழுதிவைத்தவையில் இருந்து படித்துதெரிந்துகொள்கின்றோம்.
திருமுழுக்கு யோவானும் பருசுத்தபெற்றோருக்கு முதிர்வயதில் அற்புதமாக பிறந்து, இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுத்தினார். இவை எல்லாமே முன்குறிக்கப்பட்ட இறை திட்டங்களே. இயேசு இறைமகனாக வந்தார் என்பதை திருமுழுக்கு பெற்றவுடன் மீண்டும் அறிவிக்கப்படுகிறார்.-
மரியாவின் கருவில் கபிரியேல்தேவதூதர் அறிவித்தும்/- யோசேப்பின் கனவில் யோயேப்பிற்கும் இயேசு இறைமகன் என்பது அறிவிக்கப்படுகிறது. அதன்பின்பு 30 வயதில் திருமுழுக்கு பெற்றவுடன் வானத்தில் இருந்து குரலொலி வந்தும், தூயஆவியானவர் புறாவைபோல் இறங்கிவந்தும் அறிவிக்கபடுகின்றார்.
சீடர்களை அழைத்ததும்- இறைஅரசை மனிதருக்கு போதித்ததும்- அற்புதங்கள் அதிசயங்கள் இயேசுமூலம் நடந்ததும்- மக்கள்கூட்டம் அவருக்கு பின்னே சென்றதும்- பரிசேயர் சதுசேயர் ( படித்த வேதவல்லுனர் கூட்டம்) இயேசுவின்மேல் பொறமைகொண்டு அவரை அழித்துவிட நினைத்ததும் நாம் வேதாகமத்தில் படிக்கின்றோம்.
இயேசு நன்மைசெய்கிறவராகவே சுற்றி திரிவதை அறிந்தும், அவரை விசுவாசிக்காமல் கொலைசெய்யும்படி லூசிப்பராகிய சாத்தானின்கூட்டம் அவர்களை ஏவிவிடுகிறது. அவர்களும் அதற்கு அடிமையாகிறார்கள்- எனினும் இதுவும் இறைதிட்டமே-
இயேசு மனிதஇனம்செய்த, செய்கிற, செய்யபோகிற பாவங்கள் மனிதரை பரலோகம் கூட்டிவராது. அவர்கள் மனம்திரும்பி மன்புகேட்கவைத்து, தன்னிடம் கூட்டிசேர்க ஆண்டவர் துடிக்கின்றார். அதனாலே அன்று பரைய ஏற்பாட்டுகாலத்தில் - பாவம் கழுவப்பட பாவநிவர்த்தி பலிகளை செலுத்தியதற்கு பதிலாக- தானே பலிஆடாக வந்து தனது இரத்தத்தால் மனிதனது பாவங்களை கழுவ சித்தம்கொண்டார்.
1) தன்னோடு பந்தி அமர்ந்த சீடர் யூதாஸ்கரியோத்தால் காட்டிக்கொடுக்க திட்டமிடப்படுகிறார்.-( அன்று இயேசுவின்சீடர்கள் கிட்டதட்ட ஒரேமாதிரி உடைகளும் உருவமும் கொண்டிருந்திருக்கலாம்)
2) இறுதியாக சீடர்களுடன் உண்ணும்போது அப்பத்தையும் இரசத்தையும் ஆசீர்வதித்து இதை என்நினைவாக- நான் மீண்டும்வரும்வரையும்- உண்டுகுடியுங்கள். இது என்சரீரமும் இரத்தமும்ஆகும்- ( எமது பாவத்திற்காக அவர் தனது உடலில் இரத்தம் சிந்தி , எமது உயிர்ப்புக்காக தனது உடலை கொடுக்கபோகிறார் என்பதையே சொல்கின்றார்)
தனது அடக்கத்தின்பின் உயிர்தெழபோவதையும்( எம்மரணத்தின் பின் நாமும் உயிர்தெழுவோம் என்பதை) இவ்வாறு கூறுகின்றார்.
திருவிருந்து உண்ணும்போது நாம் ஆண்டவரது மரணத்தையும் உயிர்பையும் எடுத்துரைக்கும் படி கேட்டுக்கொள்கின்றார்.குருத்துவம் இன்றும் இதை திருப்பலியில் எடுத்துரைக்கின்றது. நாமும் அறிக்கைபண்ணுகின்றோம்.
திருவிருந்தும் , குருத்துவமும் உருவாகிய நாளாக இயேசுவின் இராபோசனம் அமைகின்றது.
3)
ஜெத்சமனி தோட்டத்தில் இயேசு இரத்தவியர்வை வரும் வரை ஜெபித்தார். மோசேயும் எலியாவும் ஏனோக்கும் ( மரணத்தை காணாதவர்கள்) இதில் இருவர் மோசேயும் எலியாவும் உரையாடியதாக சீடர்கள் சொல்வதை வாசிக்கின்றோம்.
இயேசு படப்போகும் பாடுகள் மனிதனால் ஒருநிமிடம் கூட தாங்கமுடியாதவை. அதற்கு கல்வாரிசிலுவை மட்டும் தாங்கும் சக்திக்காக தரும்படி மகனா மனித சரீதத்தில் இருந்த இயேசுவானவர் தந்தையிடம் கேட்டிகின்றார். எமது பாவத்தின் சுமை அவ்வளவு கொடூரமானது.
4) யூதாஸ்முத்தமிட்டு காட்டிக்கொடுக்கின்றான். சீடர்கள் சிதறடிக்கப்படுகிறார்கள். இயேசுவை கைதுசெய்து இழுத்து செல்கிறார்கள்.
5) இயேசுவை பேதுரு தெரியாது என்று மறுதலிக்கிறார். மனம்வருந்தி அழுது மன்னிப்பை பெற்றுகொண்டு- மறைந்துவாழ்ந்து- முதல் சீடராகி திருச்சபையை எழுப்புகின்றார்.
6) இயேசுவை பிலாத்துவிடத்தில் அழைத்துசென்று சிலுவைமரணத்தை கொடுக்கும்படி கேட்கிறார்கள்.. இயேசுவை விடுவிக்க பிலாத்து பல முயற்சிபண்ணியும் முடியாமல்- கைகளைகழுவி மரணத்திற்கு இயேசுவை ஒப்புகொடுக்கின்றார்.
7) முள்முடி சூட்டப்பட்டு- 39 சவுக்கடிகளல் தசையே பிளவுபட அடிக்கப்பட்டு- அவமானப்படுத்தப்பட்டு- பாரமான மரத்தால் சிலுவையை செய்து இயேசுவின் தோளில் வைக்கிறார்கள்.
எமது பாவங்களையும் , சாபங்களையும்,நோய்களையும் இயேசு சுமக்கின்றார்.
8) சிலுவையில் அறைந்து பருசுத்தர் இயேசுவை கள்வர்மத்தியில் தொங்கவிடுகிறார்கள்.
இதுஎல்லாம் எமக்காக எமது பாவம் போக்க சாபம்போக்க நோயில் இருந்து விடுதலை அளிக்க ஆண்டவர் இயேசு எமக்காக தாங்கிக்கொண்டார். .
9) சிலுவைமரத்தடியில் இருதயத்தில் வாள் உருவப்பட்ட வேதனையில் துடிக்கும் - தன்னைசுமந்து வளர்த்த தாயை- ஆதரவற்றவவாக விடமுடியாமல் தனது அன்புசீடர் யோவானிடம் ஒப்படைக்கின்றார். இதிலிருந்து என்னதெரிகிறது..30 வயதுவரை தாயோடு இருந்தார். அவர்ஊழியம் தொ டங்கிய கானாவூர் திருமணம் தொடங்கி சிலுவை வரை அந்த 3, 3 1/2 வருடங்கள் இயேசுபோன இடமெல்லாம் மரியாவும் சென்றிருக்கவேண்டும். முதலாவது சீடர் மரியாதான் என்பதே. (இதையும் புரிந்துகொள்ளமுடியாமல் சத்துரு லூசிப்பரின் திட்டம் பல பக்திமான்களின் கண்களையும் மறைக்கின்றது)
தன்னை விசுவசித்த கள்வனை மன்னிப்பும் கொடுத்து, பரதேசில் (பரலோகம் அல்ல) இடமும் கொடுக்கிறார்.
10) இறுதியல் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று எமக்கு மன்னிப்பும் கொடுத்து , தனது ஆவியை தந்தையிடம் ஒப்புகொடுக்கின்றார். அந்தவேளை பூமியே அதிர்ந்தது. வானம் இருண்டது. ஆலயதிரைசீலை கிழிந்தது- — வேதாகமத்தில் நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.✠
இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
மத்தேயு
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள். கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள். என்றுள்ளது.
அருகில் நின்றவர்களும் எல்லோரும் நடுநடுங்கினார்கள். இயேசுவும் பாதாளத்தில் இறங்கியதும் ,பாதாளம் திறக்கப்பட்டு பழையஏற்பாட்டு பருசுத்தவான்கள் நடமாடினதை மக்கள் கண்டனர்.
—பழையஏற்பாட்டுகாலத்தில் மரித்த விசுவாசிகளை சந்தித்தார். அவர்களுக்கும் இறைஅரசை எடுத்துரைத்து போதித்தார் . என்றும் விசுவாசிக்கின்றோம். அப்படியானால் அங்கே வந்த கள்வனுக்கும் இறைஅரசை அறிவித்த பின் அவன் எல்லாவற்றையும் விசுவாசித்திபின் மீட்பை அடைந்திருக்கலாம் என்று விசுவசிப்போம்.——— நம் எப்படிபட்ட பாவம் செய்திருந்தாலும் சிலுவையில் அறையுண்ட ஏஜ்சு வை நோக்கி பார்போம். அத்தனை குற்றங்களும் மன்னிக்க ஆண்டவராகிய இயேசு ஆவலாக இருக்கின்றார்.
இயேசுவை மார்பில் ஈட்டியால் குத்தினவனும் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு சாட்சி சொன்னான்.
10) முன்அறிவித்தபடியே இயேசு 3 ஆம்நாள் உயிர் பெற்றார். மரணத்தையும் சாத்தானையும் வெற்றிகொண்டார்.