tamil christians songs

Monday, July 31, 2023

Aachen தேவாலயம் in


 உங்களை germany இல்   அமைந்திருக்கும் 

உலகப பாரம்பரிய Aachen cathedral  ற்கு அழைத்து செல்கின்றேன். 

  இத் தேவாலயம் கரோலிங்கியன் காலத்திலிருந்தே  பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.

ரோமானியப் பேரரசின் முடிவிற்குப் பிறகு மேற்கு ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பு, மற்றும் மறுமலர்ச்சியின் அடையாளமாகவும்,தலைசிறந்த

கட்டிட கலையின் படைப்பாகவும்,இத்ததேவாலயம் கருதப்படுகிறது. 

 இதனை  உருவாக்கியவர்   Karl der große எனும்  முதல் மேற்கத்திய பேரரசர்ப ஆவார். அவரது தந்தை மற்றும் சகோதரர் இறந்த பிறகு, அவர்  ஆட்சியை தொடர்ந்தார்.. அவரது ஆட்சியின் முதல் தசாப்தங்களில், அவர் தனது பேரரசைப் பாதுகாப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தினார்

 இறுதியில், அவர் Spain  வரையிலும், denmark- மத்திய இத்தாலி வரையிலும் பரவியிருந்த ஒரு பகுதியை ஆட்சி செய்தார். அவரது ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையால் தூண்டப்பட்டு, பல இடங்களை கிறிஸ்தவ மதமாக்கினார்.

உலக பாரம்பரிய தளமான Aachen cathedral   1200 ஆண்டுகால கட்டிட வரலாறு ஆகும், கரோலிங்கியன் மைய கட்டிடம் செங்கல் குவிமாடத்துடன் இயற்கையாகவே சிறந்த கட்டமைப்பாக உள்ளது. எண்கோணத்தில்  கட்டப்பட்டு1200 ஆண்டுகள்  நிலைத்து நிற்கின்றது

அவரது ஆழ்ந்த சிந்தனையும், கிறிஸ்தவ விசுவாசமும்   ஒன்றிணைந்து முதலில் உருவாகியதே இந்த  குவிமாடம். 

இந்த தேவாலயம்

 பாதி தெய்வீகம், பாதி மனித தோற்றம். என கட்டப்பட்டது. 

மேலே வட்டவடிவம்- ஆண்டவர் முடிவில்லாதவர்  என்பதற்கு அடையாளமாகவும் / கீழே எண்சதுர வடிவம்/ எட்டுதிசைகளின் உயிரினமும் ஆண்டவருக்கு கீழேயே எனும் அடையாளத்துடன்  அமைக்கப்பட்ட குவிமாடத்துடன் இந்த தேவாலயம் நீண்ட காலமாக மதநம்பிக்கையிலும்  கட்டிடக்கலையிலும் முன்மாதிரியாக கருதப்படுகிறது,

இன்றைய கதீட்ரல் 793 - 813 க்கு இடையில் அரசர் Karl der große வால் அரண்மனை தேவாலயமாக கட்டப்பட்டது மற்றும் அது முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு பேரரசரின் கடைசி ஓய்வு இடமாக மாறியது

அரசரது மரணத்திற்குப் பிறகும், கதீட்ரல் 1531 வரை அரசர்கள் முடிசூட்டப்பட்ட இடமாக செயல்பட்டது. 600 ஆண்டுகளில், 30 ஜெர்மன் மன்னர்கள் இங்கு முடிசூட்டப்பட்டனர்.  Aachen cathedral  பிற்கால பழங்கால, carolingen,    காலங்களிலிருந்து புனிதமான கலாச்சார பொக்கிஷங்களைக்  கொண்டுள்ளது.கலைப் படைப்புகள், தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆவணங்கள், அவை விலைமதிப்பற்றவை.


அவற்றுள் 1)அன்னை மரியாவின் ஆடை.

இயற்கை நிற கைத்தறி ஆடை  153 செ.மீ உயரமும் 132 செ.மீ அகலமும்.


இந்த ஆடையின் தோற்றம் 5 ஆம் நூற்றாண்டிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, மேரி தனது ஆடைகளை பக்தியுள்ள அண்டை வீட்டாருக்கு விநியோகிக்க சீடர் யோவானை நியமித்தார் என சொல்லப்படுகின்றது.

2) இயேசு பாலகனாக இருந்தபோது பயன்படுத்திய டயப்பர்.

மண்ணிறம் கலந்த மஞ்சல் நிறத்தால் ஆன கம்பளிதுணிபோல்

3) திருமாலுக்கு யோவான்  தலை துண்டிக்கப்பட்ட  போது மூடப்பட்ட  துணி.

திருமுழுக்கு

யோவான் தலையை துண்டித்த போது 

மூடிய

இரத்தக் கறை படிந்த துணி, 

   துணியால் மூடப்பட்ட யோவானின் தலை ஆரம்பத்தில் ஹெரோதின் அரண்மனையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 4 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் துறவிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மாசிடோனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு .  John  babtich அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. இந்த புனித துணி இறுதியில் Aachen  cathedral  ற்கு வந்துt சேர்ந்தது.

இவை ஏழுவருடத்திற்கு ஒருமுறை பொதுமக்களின்  பார்வைக்காக வைக்கப்படும்.

கதீட்ரலின் ஐரோப்பிய முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சியில், ஆச்சென் கதீட்ரலுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை 1990 களில் நிறுவப்பட்டது. கதீட்ரல் மற்றும் அதன் வரலாற்றை இளையவர்களுக்கு அணுகும் வகையில் செயல்படுகின்றது.

அதன் சிறப்பு (கட்டடக்கலை) வரலாற்று முக்கியத்துவம் காரணமாக, கதீட்ரல் ஜெர்மனியில் 1978 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட்ட முதல் கலாச்சார தளமாகும்



Saturday, July 15, 2023

உமதுஅரசு வருக.

 இருள்சூழ்ந்து செல்கின்ற இவ்வுலகில்  இறைஅன்பை  மலரச்செய்து ஒளிகொடுக்க தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார்  எம் இறைமகன் இயேசுகிறிஸ்து. 

இயேசுகிஸ்து இவ்வுலகிற்கு வந்து இறைஅரசை  பற்றி எமக்கு அறிவித்தார். 

இயேசு எமக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் “உமது அரசு வருக” என்று ஜெபிக்க கற்றுக்கொடுத்துள்ளார்.

இறை ஆட்சியை இறையரசை ஏற்றுக்கொண்டு, தங்களை  அதற்கு உட்படுத்தி உருவாகின்றவர்களே இறைமக்கள்.  இந்த இறையாட்சியில் பங்குபெற  தயார்படுத்தும்   மக்களின்  திருக்கூட்டம் தான் திருச்சபை.  

இறைஅரசை எல்லாமக்களுக்கும் அறிவிக்க  வேண்டிய  பொறுப்பும் கடமையும் திருச்சபையாகிய எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

திருச்சபையினுடைய வளர்ச்சி,    அதன் மக்கள் தொகையினாலோ, அதன் சொத்துமதிப்பாலோ,அநேக  நிறுவனங்கள்  இருக்கிறது என்பதாலோ  அமைவதில்லை.

மாறாக அது எந்தஅளவுக்கு கிறிஸ்துவையும் அதன் போதனையையும் பின்பற்றி வாழ்கின்றது என்பதைகொண்டே அமைகின்றது.

“ உமது அரசு வருக” என்கிறார் எமது ஆண்டவர்.    , ஆண்டவருடைய அரசு இம்மண்ணில்  உருவாகும்  காலம் அண்மித்திருக்கின்றது . 

வேதபுத்தகத்தில்  பல இடங்களில்   இறுதிகால எச்சரிக்கையை படிக்கலாம்.  இங்கே இயேசுகிறிஸ்துவை சீடர்கள் கேட்டபோது,  அவர்கூறியதை பார்க்கலாம்.

மத்தேயு அதிகாரம் 24: 3-44

பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.

18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்.

19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.

20 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

21 ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

22 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

23 அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.

29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

34 இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

41 இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.

42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.


எம்மத்தியில் வாழும் மக்களுக்கு  இதனை அறிவிக்கும்  பொறுப்பு திருச்சபையாகிய எம் ஒவ்வொருவருக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது.  இயேசுகிறிஸ்து எமக்கு கற்பித்ததையும் கட்டளையிட்டதையும் ,  கூடுமானவரை  நிறைவேற்றி எமது வாழ்வை  இறையாட்சியில் பங்குபெற   ஆயத்தம்செய்வோம்.

St.Lamberti Kirche in Munster Germany

  https://youtu.be/7sdDIGNnPRQ?si=rP7HK0oRqzdOoj2O