இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். 15 ஆவது வயதில் கால்மேல் மடத்தில் சேர்ந்தார்.
இயேசுவின் மீது ஆழ்ந்த அன்பு நம்பிக்கை கொண்டு தாழ்ச்சி எழிமையில் சிறந்து விளங்கினார்.
ஆன்மாக்களை மீட்க சென்றுள்ள தவம்செய்தார்.எந்த வேலையை செய்தாலும் குழந்தை மனத்துடன் மகிழ்சியாகவே செய்தார்.
புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா எழுதியுள்ளார் .
ஓர் ஆன்மாவின் வரலாறு (story of a soul)என்ற சுயசரிதையையும் எழுதினார்.
வியாதிப்பட்டு இருந்தபோதும் சிரித்தமுகத்துடனே இருந்தார்.
விண்ணக வாழ்விலும் இவ்வுலக மக்களுக்கு நன்மை செய்வதிலே செலவிடுவேன்.
விண்ணில் இருந்து றோஜா மலர் மாரி பொழிவேன்,
என்று கூறி உறுதிமொழியுடன் தமது 24 - வது வயதில் இவ்வுலக வாழ்வை முடித்தார். அவரது வாக்குறுதி இன்றுவரையிலும் திருச்சபையில் நிறைவேறுவதை நாம் உணர்கிறோம். .
No comments:
Post a Comment