ஜேர்மனி நாட்டில் முன்ஸ்ரர் நகரம் பல வரலாற்று தேவாலங்களாலும் கட்டிடங்களாலும. வகைப்படுத்தப்பட்டுள்ளது.்அங்கு அமைந்துள்ள லம்பேட்( st. Lamberti) ஆலயம் பல வரலாற்றுபதிவுகளை கொண்டுள்ளது. கிறிஸ்துவிற்கு பின 500ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாமுழுவதும் கிறிஸ்தம் பரவியிருந்த காலகட்டத்தில் ஜரோப்பாவில் குழந்தையில் அனைவரும் ஞானஸ்ஞானம் பெற்றிருந்தனர். ஆதி கிறிஸ்தவ சமூகத்தையும் கட்டுகோப்புகளையும் கொண்டிருந்த மக்களுக்கு 1500 களில் தோன்றிய Anabaptsm என்ற அமைப்பு நன்மைகளை செய்தது. மக்களின் நன்மதிப்பைபெற்று இந்த அமைப்பு Munster நகர ஆட்சியை கைப்பற்றியது. தமது ஆட்சியில் Anabaptich அமைப்பு மக்களுக்கு கட்டாய திருமுழுக்கு கொடுத்தது.அங்கு கிணறு உள்ள இடங்களில் கட்டாய திருமுழுக்கு மக்களை வற்புறித்தி கட்டாயத்தின் பேரில் கொடுக்கப்பட்டது.மீண்டும் திருமுழுக்கு பெற மறுப்பவர்கள் வெளியே செல்லமுடியாது. இதனால் மக்களின் வெறுப்பை பெற்று மக்கள் கிளர்ச்சி மறைமுகமாக ஏற்பட்டது. இதனை அடுத்து பல சரித்திர அழிவுகளையும், நினைவுச்சின்னங்களையும் கொண்ட நகராமாக முன்ஸ்ரர் விளங்குகிறது.
இந்த கிழர்ச்சியில் அனபாப்டிஸ்ட் பேரரசின் எஞ்சியிருந்த மூன்று தலைவர்கள் பகிரங்கமாக சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு, அவர்கள் உடல்கள் தேவாலய கோபுரத்தில் இருந்து மூன்று இரும்புக்கூடைகளில் கொங்கவிடப்பட்டன.(1535)
இது ஜேர்மனியில் வேதாகமத்தை புதிதாக மொழிபெயர்து கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்த பகுதியினர் காலமாக உள்ளது.
10 ஆம்நூற்றாண்டுக்கு முன்னர் எழுப்பப்பட்ட தேவாலயம் பலமுறை விரிவுபடுத்தப்பட்டும் பெரிய அழிவுகளைச் சந்தித்துள்ளது.
மீண்டும் மீண்டும் எழுப்பிப்பிடும்போது வெவ்வேறு கட்டிடகலை பாணிகளால் அடையாளப்படுத்தப்பட்டது.
Lamberti தேவாலத்தின் நுழைவாயில் கதவுக்குமேலே ஒரு கலைகல்செதுக்கல் நிறுவப்பட்டுள்ளது. இது இயேசுவின் வேர் என்று அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் இப்படி காணலாம்… வாக்குறியளிக்கப்பட்ட இரட்சகரை விலைமதிப்பற்ற கனியாக வெளிப்படுத்துகிறது. மரியன்னையின் மடியில் உள்ள இயேசு.
வண்ணமயமான தேவாலய ஜன்னல்கள், புயரமான பீடகர் குழு இசைகருவி/ இதில் நடுவில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு,சிருவையின் கீழ் மரியா யோவான்- இடதுபுறஜன்றலில் உயிர்த்தெழுந்த இயேசு - இயேசுவின் விண்ணேற்பு-
St lambert படம் உள்ள தேவாலத்தின் ஒருபக்கமாக லத்தீன் பிதாக்கள் என்று அழைக்கப்படுவர்களை காணலாம். வலதுபுறமாக தேவாலயத்தின் பெயர் இயேசுவிக்காக ஜெபித்தில் அதன் உயிரைக்கொடுத்த Lamberti.
ஆண்டவர் மனிதரை அதிகமாக நேசிக்கிறார்.அவர் நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்கவும், மரணத்தைகூட நம்முடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் மனிதர் ஆனார். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததால், விசுவாசத்தின்மூலம், மனிதர்களாகய நாம் அவருடைய சகோதர சகோதரிகளாக, அவருக்கு சொந்தமாகின்றோம். நாமும் மரித்தபின் அவர்நம்மை பரலோகத்தின் மகிமையிலும், அவர் பக்கத்திலும், இருக்கும்படி செய்வார். இதுவே அனைத்து கிறிஸதவர்களின் நம்பிக்கையின் அடிப்படையாகும். இதனாலே நாம் மகிழ்ச்சியுடன் தேவாலயத்தில் வழிபாடுகளில் பங்குபெறுகன்றோம்.
No comments:
Post a Comment